எமது நோக்கு
மனித நேயமிக்க செயற்திறனுடைய வகையில் அரச சேவை வழங்கும் முன்னோடிஎமது பணிக்கூற்று
காணப்படும் வளங்களை அரச கொள்கைகளுக்கு ஏற்ப முறையான முகாமைத்துவம் மூலம் பெறப்படும் தொடர்ச்சியான அபிவிருத்தியை செயற்திறன் மிக்க வகையில் பிரதேச மக்களுக்கு சென்றடையச் செய்தல்சிறப்புகள்
- பிரதேச செயலாளர் பிரிவிலே அரசசேவை வழங்கும் பிரதான அரச நிறுவனமாகும்.
- ஒரு மனிதனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை அரச துறையில் கிடைக்கும் அனைத்து சேவைகளையும் அதிகாரத்திற்குட்பட்ட மக்களுக்கு வழங்கும் முன்னிலையான நிறுவனமாகும்.
- பிரதேசத்திலே விசாலமான மனித வளங்களை கொண்ட நிறுவனமாகும்.
- அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள, இரவு பகல் பாராது அயராமல் தமது பணிகளை நிறைவேற்றுகின்ற சிறந்த தொழில்நுட்ப அறிவினையுடைய பொது சேவைகளில் தம்மை முழுமையாக அர்ப்பணிக்கின்ற திறமையான பணியாளர்களைக் கொண்ட நிறுவனமாகும்.
- மக்களுக்கு தகவல்களை பெற்றுக்கொள்வதற்கும், தேவையான விண்ணப்ப படிவத்தினை எந்நேரத்திலும் அலுவலகத்தின் இணையதளத்திற்கு பிரவேசிப்பதனூடாக பெற்றுக்கொள்ளும் வசதிகளை ஏற்படுத்தியுள்ளதுடன் QR குறியீட்டினை பயன்படுத்துவதனூடாக இணையதளத்திற்கு இலகுவாக பிரவேசிக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ள பிரதேச செயலாளர் காரியாலயமாகும்.
- மக்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு இலகுவாக பிரதான வீதியின் அருகாமையில் அமைந்திருத்தல்.
- அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் சிறந்த தொடர்புகளை பேணி சேவை பெறுநர்களின் தேவைகளை செயற்திறன் மிக்க வகையில் வழங்குவதனூடாக மக்களின் நம்பிக்கையையும் பாராட்டினையும் பெற்ற நாட்டின் புகழ்பெற்ற அரச நிறுவனமாகும்.
- பொது மக்கள் தமது பணியினை இனிதே நிறைவேற்றிக் கொள்வதற்கு இலகுவாக கிழமை நாட்களில் பொது மக்கள் தினத்தில் அலுவலக நேரத்தை தவிர்ந்த அத்தியாவசிய பொது மக்கள் சேவையினை வழங்குவதற்கு இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும் இலங்கை வரலாற்றிலே முதல் மற்றும் ஒரே பிரதேச செயலாளர் காரியாலயமாகும்.
- அலுவலகத்திலே அகம் மற்றும் புறச் சூலை ஈர்க்கும் வகையில் 5s எண்ணக் கருவினை நடைமுறைபடுத்தும் அரச நிறுவனமாகும்.
- அரச நிர்வாக அமைப்பினுள் அரச சுற்றறிக்கை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு பொது மக்களுக்கு அரசின் மூலம் கிடைக்கும் அனைத்து நிவாரணங்களையும் பெற்றுக் கொடுக்கும் மக்களுக்கு நெருங்கிய அரச நிறுவனமாகும்.
நோக்கம்
- பிரதேசத்தின் போசனை குறைபாட்டை குறைத்தல்
- பிரதேசத்திலே விவசாய அமைப்புக்கனை ஊக்குவித்து கமநலத்திற்கு புத்துயிர் கொடுத்தல்
- தேசிய கைத்தொழில் மற்றும் பிரதேசத்திற்குரிய கைத்தொழிலாளர்களை இணங்கண்டு அவர்களை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்
- தனிநபர் வருமானத்தை அதிகரித்தல்
- பிரதேசத்தில் தொழில்வாய்ப்பின்மையை குறைத்தல்
- பிரதேச மக்களின் எண்ணங்களை உயர் மட்டத்திற்கு கொண்டு வருதல்
- சிறுவர் துஷ்பிரயோகத்தை ஒழித்தல் மற்றும் பெண் வன்கொடுமையை எதிர்த்தல்
- பிரதேச மக்களின் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்தலும் உட்கட்டமைப்பு வசதிகனை அபிவிருத்தி செய்தல்
- பல்லின மக்கள் வாழும் எம் பிரதேசத்தில் இனங்களுக்கிடையில் ஒற்றுமையையும் சமத்துவத்தையும் ஏற்படுத்துதல்
- நவீன தொழில்நுட்ப முறை மூலம் மக்களுக்கு மிக இலகுவான முறை மூலம் சேவைகளை மிக செயற்திறனாக்குதல்.
- அலுவலகத்தில் அனைத்து உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்போடும் மற்றும் பிரதேசத்தில் மற்றைய அரச நிறுவனங்களை இணைத்துக்கொண்டு மக்களுக்கு செயற்திறன் மிக்க அரச சேவை வழங்குவதனூடாக பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாசாரம் என்றடிப்படையில் வளர்ச்சியடைந்த பிரதேசத்தினை உருவாக்குதல்.
அறிமுகம்
மேல் மாகாணத்திலே களுத்துறை மாவட்டத்திற்குரிய புலத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவின் கிழக்கில் இரத்தினபுரி மாவட்டத்திலே அயகம பிரதேச செயலாளர் பிரிவின் வடக்கில் ஹொரணை பிரதேச செயலாளர் பிரிவின் தெற்கில் அகலவத்த பிரதேச செயலாளர் பிரிவின் மேற்கில் மதுராவலை பிரதேச செயலாளர் பிரிவின் எல்லைக்குட்பட்ட சதுர கிலோமீற்றர் 212.2 பரப்பளவு கொண்ட பூமி பிரதேசம்.
கிராம உத்தியோகத்தர் பிரிவு 54 ஆகும். 1000 அடி உயரத்தில் வரைபடத்தை தாண்டிபோகும் சில மலை உச்சிகளை காணக்கூடியதாகவுள்ள கிழக்கு பிரிவில் உள்ள மலைநடுவில் நீரோட்டத்திற்கு ஊற்றெடுக்கும் கால்வாய்களாலும் ஓடைகளாலும் களுகங்கையும் குடாகங்கையும் போசணைபெறும். சம்பிரதாய கிராமிய கலாசாரத்திற்கு உரிமை கூறும் புலத்சிங்களயின் அனைத்து செயற்பாடுகளும் களுகங்கையின் அமைப்பிலும் செயற்பாட்டிலும் தங்கியுள்ளது. சமநல மலை உச்சியிலிருந்து களுத்துறை கங்கையின் முகப்புவரை பாய்ந்தோடும் களுகங்கையும் அதனை போசணையூட்டும் குகுளே கங்கை, யடகம்பிட்டிய கங்கை,பேலன் கங்கை, மகுரு கங்கை, கள்ளே கால்வாயும் இணைந்து உருவாகும் சிறு கங்கைகளை சுற்றி உள்ளதால் மாரி காலங்களில் வெள்ளம் மற்றும் மண் சரிவு போன்ற அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
வரலாற்று சிறப்புக்கு மட்டுமன்றி உலக சிறப்புக்கும் உரிமை கோரும் புலத்சிங்கள என்பது உண்மையிலே அழகிய கிராமமாகும். அலங்காரம் பெற்ற மலை மேடுகள், கங்கைகள், கால்வய்களும் ஓடைகளும் அழகிய நீர் வீழ்ச்சிகளும் இப்பிரதேசத்தின் இயற்கை அழகிற்கு அழகு சேர்க்கின்றது.
2016 ஆம் ஆண்டளவில் முழு சனத்தொகை 70470 ஆகும். பல மதங்களை பின்பற்றும் பல்லின மக்கள் நட்புறவுடன் ஒற்றுமையாக வாழ்கின்ற இங்கு தேயிலை, இறப்பர், தேங்காய், கருவா போன்றவை வருமான வழிகளாகும். கமநல துறையில் அதிக ஈடுபாடு இருப்பினும் புத்தாக்கமான வியாபார துறையை நோக்கி நகர்வதனை அவதானிக்க கூடியதாக உள்ளது.
தெற்காசியாவில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இயற்கையான விசாலமான கற்குகையான பாஹியன்கல குகை இங்கு அமைந்துள்ளது. 5 ஆம் நூற்றாண்டில் இந்நாட்டுக்கு வருகை தந்த சீன நாட்டவர் தனது பாத யாத்திரையின் போது இவ்வடத்தில் தங்கி இருந்த்தாக சீன வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாற்பதாயிரம் வருடங்களுக்கு முன்பு இங்கு மனிதர்கள் வாழ்ந்ததாக தொல்பொருட்கள் கிடைக்கும் பழமை வாய்ந்த இடமாகும்.
வலவ்வத்த என்கின்ற சிறப்புமிக்க பிரதேசம் இங்கு அமைந்துள்ளது. உலகில் தற்போது அழிவடைந்து வரும் சில மூலிகைகளை இங்கு காணலாம். அதனால் உலக மக்களின் பார்வையை ஈர்த்துள்ளது.
அரசினால் நடைமுறைபடுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களினால் போசனை பெற்று அபிவிருத்தியை நோக்கி நகருகின்ற இப்பிரதேசத்தில் அபிவிருத்தி அடையக்கூடிய இடங்களும் காணப்படுகின்றன. இப்பிரதேசம் அனைத்து துறையிலும் முழுமையாக அபிவிருத்திஅடைந்து விளங்குவதே இம்மக்களின் ஒரே எதிர்பார்ப்பாகும்.
தொடக்கத்திலிருந்து சேவையாற்றிய பிரதேச செயலாளர்கள்
|
திரு.ஞானவிபுல முனசிங்க |
1964 - 1966 |
|
திரு. டீ.தர்மசேன |
1966 - 1967 |
|
திரு.ஏ.ஏ.நாணயக்கார |
1967 - 1968 |
|
திரு.கே.டி.சில்வா |
1968 - 1969 |
|
திரு.ஜீ.டப்.ஆர். சில்வா |
1969 - 1970 |
|
திரு.வோல்டர் கே. ஹேதுமுனி |
1970 - 1976 |
|
திரு.பீ.எம்.சிரிவர்தன |
1977 - 1983 |
|
திரு.டீ.ஜீ.ஆரியசேன |
1984 - 1988 |
|
திரு.ஜே.ஜே.ஆரியசேன |
1989 - 1990 |
|
திரு.கே.டி.பியசேன |
1990 -1998 |
|
திரு.பீ.டி.ஜயநெத்தி |
2000 - 2003 |
|
திரு.பீ.டி.சிரிவர்தன |
2003 - 2005 |
|
திருமதி. பி.ஏ.எம்.பீ.அபேரத்ன |
2005 - 2011 |
|
திருமதி. ஐரங்கனி வீரசிங்க |
2011 - 2016 |
|
திரு.எஸ்.கே. ஹேனாதீர |
2016 - 2019 |
|
திரு.பீ.ஆர்.பீ.பெரேரா |
2019 - 2024 |
| கே.டி.கே.சுலோச்சனி மஹாத்மியா | 2025 - மே டேக்வா |
2020 ஆம் ஆண்டில் அனுமதிக்கப்பட்ட பணியாளர் தொகுதி மற்றும் அவ்வருடத்தில் பணியாற்றிய பணியாளர் தொகுதி
மத்தய அரசு மாகாண சபை
பதவி அனுமதி இப்போது வெற்றிடம் அனுமதி இப்போது வெற்றிடம்
உள்ள உள்ள
பிரதேச செயலாளர்
உதவி பிரதேச செயலாளர்
கணக்காளர்
உதவி பணிப்பாளர் (திட்டமிடல்)
நிர்வாக உத்தியோகத்தர்
மேலதிக மாவட்ட பதிவாளர்
அரச முகாமைத்துவ சேவை
ஓய்வூதிய உத்தியோகத்தர்
மொழிப்பெயர்ப்பாளர்
சாரதி
அலுவலக உதவியாளர்
தகவல்தொழில்நுட்ப மற்றும் தொடர்பாடல் உதவியாளர்
வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள்

















